மகாவலி ஆற்றில் மிதந்து வந்த சடலம்
மகாவலி ஆற்றிலிருந்து வயோதிபப் பெண்ணின் சடலமொன்றை நாவலப்பிட்டி பொலிஸார் மீட்டுள்ளனர்.
ஆறு பிள்ளைகளின் தாயான 84 வயதுடைய நாவலப்பிட்டி டேலி வீதியை சேர்ந்த ஹெகலின்னாரங்கல என்பரவே இன்று சடலமாக மீட்கப்பட்டதாக நாவலப்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.
நான்கு நாட்களுக்கு முன்னர் வீட்டிலிருந்த தாய் காணாமல் போயுள்ளதாக நாவலப்பிட்டி பொலிஸ் நிலையத்தில் மகள் முறைப்பாடு செய்திருந்தார்.
இந்த நிலையில் பொலிஸாரினால் தேடப்பட்டு வந்த குறித்த ணெ்மணி நாவலப்பிட்டி பத்துருபிட்டிய பகுதியில் மகாவலி ஆற்றில் சடலமாக மிதப்பதாக பொலிஸாருக்கு பிரதேசவாசிகளினால் தகவல் வழங்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து பொலிஸார் சடலத்தை மீட்டதுடன் நாவலப்பிட்டி நீதவான் நீதிமன்ற நீதிபதி மிலந்த விமலரத்ன முன்னிலையில் மரண விசாரணை இடம்பெற்று பிரேத பரிசோதனைக்காக சடலம் நாவலப்பிட்டி மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை நாவலப்பிட்டி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.




