விண்வெளி வீரர்கள் இன்றி பூமியை வந்தடைந்த ஸ்டார்லைனர் விண்கலம்
விண்வெளி ஆராய்ச்சியாளர்களான சுனிதா வில்லியம்ஸ் (Sunita Williams) மற்றும் புட்ச் வில்மோர் Butch (Wilmore) ஆகியோரை ஏற்றிச் சென்ற போயிங் ஸ்டார்லைனர் (Boeing’s Starliner) விண்கலம் ஆட்களின்றி பூமிக்குத் திரும்பியுள்ளது.
விண்வெளியில் இருந்து இந்திய நேரப்படி நேற்று (06) மாலை பூமிக்கு புறப்பட்ட ஸ்டார்லைனர் விண்கலம், இன்று காலை 9.30 மணிக்கு நியூ மெக்சிகோ (New Mexico) மாகாணத்தில் தரையிறங்கியது.
சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர கடந்த ஜூன் மாதம் 5ஆம் திகதி போயிங் நிறுவனத்தின் ஸ்டார்லைனர் விண்கலத்தில் சர்வதேச விண்வெளி மையத்திற்குச் சென்றனர்.
விண்வெளியில் சிக்கியுள்ள வீரர்கள்
அவர்கள் 8 நாட்களுக்கு பிறகு பூமிக்கு திரும்ப திட்டமிடப்பட்டது. ஆனால், ஸ்டார் லைனர் விண்கலத்தில் ஹீலியம் வாயு கசிவு உள்ளிட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக பூமிக்கு திரும்புவதில் சிக்கல் ஏற்பட்டதால் விண்வெளியில் சிக்கி உள்ளனர்.

இதற்கிடையே சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் விண்வெளியில் இருந்து அடுத்த ஆண்டு பெப்ரவரி மாதம் பூமிக்கு திரும்புவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான க்ரு டிராகன் (Crew Dragon) விண்கலம் மூலம் அவர்கள் பூமிக்கு அழைத்து வரப்படுவார்கள் என அமெரிக்க விண்வெளி கழகமான நாசா (Nasa) அதிகாரபூர்வமாக அறிவித்தது.
விஞ்ஞானிகள் ஆய்வு
இந்த நிலையில் போயிங்கின் ஸ்டார்லைனர் விண்கலம் ஆட்கள் இல்லாமல் பூமிக்கு கொண்டு வரப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில் இன்று பூமியை நெருங்கியபோது விண்கலத்தில் இருந்து பரசூட் விரிவடைந்தது. அதன்பின் விண்கலம் மெதுவாக தரையில் இறங்கியதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் ஆகியோர் இல்லாமல் திரும்பி உள்ள விண்கலத்தில் எவ்வாறு தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது என்பது குறித்து விஞ்ஞானிகள் ஆய்வு செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
ஈழ விவகாரத்தில் கடமை தவறிய ஐ.நா! 3 நாட்கள் முன்