இந்திய சினிமாவின் பிரபல நடிகர் காலமானார்
இந்திய சினிமாவில் திறமையான நடிகரான தர்மேந்திரா காலமானதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இறக்கும் போது அவருக்கு வயது 89. உடல்நலக் குறைவு காரணமாக முன்னதாகவே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த தர்மேந்திரா இன்று (24) காலமானார்.
அழகான மற்றும் திறமையான நடிகர்களில் ஒருவர்
இந்திய சினிமாவின் மிகவும் அழகான மற்றும் திறமையான நடிகர்களில் ஒருவராகக் கருதப்படும் அவர், பொலிவுட்டின் 'ஹீ-மேன்' என்று அன்புடன் அழைக்கப்படுகிறார்.

இந்திய சினிமாவின் மிகச்சிறந்த நடிகர்களில் ஒருவராகக் கருதப்படும் தர்மேந்திரா, 1960 ஆம் ஆண்டு வெளியான 'தில் பி தேரா ஹம் பி தேரே'(Dil Bhi Tera Hum Bhi Tere) திரைப்படத்துடன் தனது வாழ்க்கையைத் தொடங்கினார்.
'யாதோன் கி பாரத்', 'மேரா காவ்ன் மேரா தேஷ்'(‘Mera Gaon Mera Desh’), 'நௌகர் பிவி கா', 'பூல் அவுர் பத்தர்', 'பேட்டாப்'(Phool Aur Patthar’, ‘Betaab’) மற்றும் 'காயல்'(Ghayal) போன்ற படங்களில் நடித்ததற்காக பல விருதுகளை வென்றுள்ளார்.
பத்ம பூஷண் விருது
2012 ஆம் ஆண்டில், இந்திய அரசு அவருக்கு இந்தியாவின் மூன்றாவது உயரிய குடிமகன் விருதான பத்ம பூஷண் விருதை வழங்கியது.

எதிர்வரும் டிசம்பர் 25 ஆம் திகதி வெளியிட திட்டமிடப்பட்டுள்ள 'இக்கிஸ்'(‘Ikkis’) திரைப்படத்தில் அவர் கடைசியாக நடித்தார்.
பஞ்சாபின் லூதியானாவில் உள்ள ஒரு கிராமத்தில் தர்மேந்திர கேவல் கிருஷ்ணன் தியோல் பிறந்தார், அவர் திரைப்படத் துறையில் நுழைவதற்கு முன்பு 1954 இல் பிரகாஷ் கவுரை மணந்தார்.
பின்னர், அவர் மூத்த நடிகை ஹேமா மாலினியுடன் காதல் உறவு கொண்டு அவரை மணந்தார்.
அவரது ஆறு குழந்தைகள் நடிகர்கள் சன்னி தியோல், பாபி தியோல், ஈஷா தியோல், அஹானா தியோல், அஜீதா மற்றும் விஜயா ஆகியோர் ஆவர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |