அரசாங்கம் திருப்தியடையவில்லை! உறுதியளித்த பஷில்
SriLanka
BombBlast
GotabayaRajapaksa
Eater
BasilRajapaksa
By Chanakyan
ஈஸ்டர் குண்டுத் தாக்குதலை போன்ற மற்றொரு தாக்குதல் நாட்டில் நடக்காது என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ உறுதியளித்துள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பஷில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இன்று கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்,
2019ஆம் ஆண்டு இடம்பெற்ற ஈஸ்டர் தாக்குதல் குறித்து விசாரணை செய்பவர்கள் அதற்கான பதில்களை வழங்குவார்கள்.
இதேவேளை சம்பந்தப்பட்ட விசாரணைகளில் காணப்படும் முன்னேற்றம் குறித்து அரசாங்கம் கூட முழுமையாக திருப்தி அடையவில்லை.
தற்போதைய சூழ்நிலையில் மே தின பேரணிகளை நடத்தாது, சுகாதார வழிகாட்டுதல்களைக் கடைப்பிடித்து கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்