கிளிநொச்சியில் குண்டு வெடிப்பு : இருவர் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதி!
Sri Lanka Police
Kilinochchi
Sri Lanka Police Investigation
By Sathangani
கிளிநொச்சியில் இடம்பெற்ற குண்டு வெடிப்பு சம்பவத்தில் படுகாயமடைந்த இருவர் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கிளிநொச்சி - தட்டுவான்கொட்டியில் இன்று (29) காலை 11:30 மணியளவில் இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது.
இது குறித்து மேலும் தெரியவருவதாவது, பாழடைந்த வீடொன்றில் அகழ்வு பணிக்காக சென்ற இரு நபர்கள் தமது பணியினை தொடர்ந்தனர்.
இருவர் படுகாயம்
இதன்போது நிலத்திற்கு கீழ் இருந்த குண்டு வெடித்து இந்த அனர்த்தம் நிகழ்ந்துள்ளது.
பலத்த காயமடைந்த இருவரும் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த அனர்த்தத்தில் கச்சாய் மற்றும் கொடிகாமம் பகுதியைச் சேர்ந்த 20 மற்றும் 50வயதுடையவர்களே இவ்வாறு காயமடைந்துள்ளனர்.
இச் சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
