பாகிஸ்தானில் குண்டுவெடிப்பு! 39 பேர் பலி - நூற்றுக்கு மேற்பட்டோர் வைத்தியசாலையில்..
Pakistan
By Vanan
வடமேற்கு பாகிஸ்தானில் இன்று இடம்பெற்ற குண்டுவெடிப்பால் 39 பேர் உயிரிழந்துள்ளதுடன், 123 பேர் காயமடைந்துள்ளனர்.
ஆப்கானிஸ்தானின் எல்லைக்கு அருகில் உள்ள கர் நகரில் ஜமியத் உலமா-இ-இஸ்லாம்-எஃப் (JUI-F) கட்சியின் 400 க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் அரசியல் கூட்டத்திற்காக கூடியபோது இக்குண்டுவெடிப்பு இடம்பெற்றுள்ளளது.
17 பேர் ஆபத்தான நிலையில்

மருத்துவமனையில் 39 இறந்த உடல்கள் இருப்பதை தன்னால் உறுதிப்படுத்த முடியும், 123 பேர் காயமடைந்துள்ளனர், இதில் 17 பேர் ஆபத்தான நிலையில் உள்ளனர்" என்று கைபர் பக்துன்க்வா மாகாணத்தின் சுகாதார அமைச்சர் ரியாஸ் அன்வர் கூறினார்.
இந்தத் தாக்குதலுக்கு எந்தக் குழுவும் இதுவரை பொறுப்பேற்கவில்லை.

6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி