யாழில் வெடிக்காத நிலையில் மீட்கப்பட்ட குண்டு
Sri Lanka Police
Jaffna
By Independent Writer
Courtesy: linton
யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு, செம்பியன்பற்று வடக்கு பகுதியில் வெடிக்காத நிலையில் காணப்பட்ட குண்டு ஒன்று மருதங்கேணி காவல்துறையினரால் பாதுகாப்பான முறையில் மீட்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
செம்பியன்பற்று வடக்கு பகுதியில் வசிக்கும் இளைஞர் ஒருவர் நாவற்பழம் பறிப்பதற்காகக் காட்டுப் பகுதிக்குச் சென்றபோது, அங்கு குறித்த குண்டைக் கண்டுள்ளார்.
குண்டை பாதுகாப்பாக மீட்ட காவல்துறை
இதனையடுத்து, உடனடியாக மருதங்கேணி காவல்துறைக்கு தகவல் வழங்கியுள்ளார். தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த மருதங்கேணி காவல்துறையினர் வெடிக்காத நிலையில் காணப்பட்ட குண்டைப் பாதுகாப்பான முறையில் அகற்றிச் சென்றுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பில் மருதங்கேணி காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி