சிறுத்தையின் பல்லை விற்க முயன்றவர் கைது
மாத்தறை பகுதியில் சிறுத்தையின் பல் ஒன்றை 50,000 ரூபாவிற்கு விற்பனை செய்ய முயன்ற குற்றச்சாட்டில் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டிருந்தார்.
இந்நிலையில் குறித்த சந்தேக நபர் மாத்தறை மேலதிக நீதவான் நீதிமன்றத்தால் தலா 200,000 ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
களுத்துறை மாவட்டத்தின் பேருவளை பகுதியைச் சேர்ந்த குறித்த சந்தேகநபர், உடவலவை தேசிய பூங்காவின் பனாஹடுவ வனச்சரக பாதுகாப்பு அலுவலக அதிகாரிகளால் 14ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது கைது செய்யப்பட்டார்.
வழக்கு விசாரணை ஒத்திவைப்பு
கைப்பற்றப்பட்ட சிறுத்தைப் பல்லுடன் சந்தேகநபர் அன்றைய தினமே மாத்தறை மேலதிக நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.

வழக்கை பரிசீலித்த நீதவான் அவரைப் பிணையில் விடுவிக்க உத்தரவிட்டதுடன், வழக்கின் மேலதிக விசாரணைகளை எதிர்வரும் டிசம்பர் 11 ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்.
இலங்கைச் சிறுத்தை வனவிலங்கு மற்றும் தாவரப் பாதுகாப்பு அவசரச் சட்டத்தின் கீழ் தீவிரமாகப் பாதுகாக்கப்பட்ட ஒரு விலங்காகும் என வனவிலங்கு அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |