வெடிகுண்டு மிரட்டல்! பதுளை மாவட்ட செயலகத்தில் பரபரப்பு
STF
Badulla
Sri Lankan Peoples
Sri Lanka Police Investigation
By Dilakshan
பதுளை மாவட்ட செயலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் ஒன்று விடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கண்டியில் முன்னர் பதிவான மிரட்டல்களைப் போலவே, சமீபத்திய மிரட்டலும் மின்னஞ்சல் மூலம் பெறப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இதற்கு பதிலளிக்கும் விதமாக, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பதுளை மாவட்ட செயலகத்தில் உள்ள ஊழியர்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.
தேடுதல் நடவடிக்கை
தற்போது தேடுதல் நடவடிக்கைகள் நடைபெற்று வருவதாகவும், வளாகத்தை ஆய்வு செய்ய சிறப்புப் பிரிவுகள் நிறுவப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

எவ்வாறாயினும், இதுவரை, சந்தேகத்திற்கிடமான பொருட்கள் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை.
சமீபத்தில் கண்டி மாவட்ட செயலகத்தை குறிவைத்து வந்த இரண்டு வெடிகுண்டு மிரட்டல்கள் மின்னஞ்சல் மூலமாக விடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்