பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனின் இல்லத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்!
பாலிவுட் மூத்த நடிகர் அமிதாப் பச்சனின் (Amitabh Bachchan) இல்லத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மும்பை ஜூஹு பகுதியில் அமைந்துள்ள அவரது ஜல்சா (Jalsa) இல்லத்திற்கே இவ்வாறு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
அமிதாப் பச்சனின் ஜல்சா இல்லம், மும்பை உயர் நீதிமன்றம், மும்பை பங்குச் சந்தை (BSE) மற்றும் மகாலக்ஷ்மி பந்தயக் களம் ஆகிய முக்கிய இடங்களை இலக்கு வைத்து இந்த வெடிகுண்டு மிரட்டல் மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது.
போலியான மிரட்டல்
மிரட்டல் வந்ததைத் தொடர்ந்து மும்பை காவல்துறையும் பாதுகாப்புப் படையினரும் உடனடியாக அமிதாப் பச்சனின் இல்லம் மற்றும் குறிப்பிடப்பட்ட அனைத்து இடங்களிலும் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
தீவிர சோதனைக்குக்குப் பிறகு சந்தேகத்திற்கு இடமான எந்தப் பொருட்களும் கண்டெடுக்கப்படவில்லை எனவும் இந்த மிரட்டல் ஒரு போலி (Hoax) மிரட்டல் என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

அமிதாப் பச்சனின் இல்லத்திற்கு சில வார இடைவெளியில் வந்த இரண்டாவது மிரட்டல் இது என தெரிவிக்கப்படுகின்றது.
பாதுகாப்பு காரணங்களுக்காக அமிதாப் பச்சனின் இல்லத்தைச் சுற்றி கூடுதல் காவலர்கள் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இத்தகைய போலியான மிரட்டல் மின்னஞ்சல்களை அனுப்பி அமைதியைக் குலைக்க முயற்சிக்கும் மர்ம நபர்களைக் கண்டறிய மும்பை காவல்துறை தீவிர விசாரணை நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |