நாவலப்பிட்டியில் வெடிகுண்டு மிரட்டலால் ஏற்பட்ட பரபரப்பு
நாவலப்பிட்டி, பஸ்பாகே கோரலவில் உள்ள பிரதேச செயலகத்தின் சேமிப்பு அறையில் வெடிகுண்டு இருப்பதாக அலுவலகத்தின் பொது மின்னஞ்சலுக்கு வந்த தகவலை தொடர்ந்து உடனடியாக சோதனைகள் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
எவ்வாறாயினும், குறித்த இடத்தில் இருந்து சந்தேகத்திற்கிடமான எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
நாவலப்பிட்டி, பஸ்பாகே கோரல பிரதேச செயலாளர் ரம்யா ஜெயசுந்தரவுக்கு அனுப்பப்பட்ட மின்னஞ்சல் செய்தியின்படி, வெளிநாட்டிலிருந்து வந்த கூடாரத்தில் ஒரு குண்டு இருப்பதாகவும், அது (29) பிற்பகல் 2:00 மணிக்கு வெடிக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.
பாதுகாப்புப் படையினருக்கு தகவல்
பிரதேச செயலாளர் உடனடியாக நடவடிக்கை எடுத்து, பிரதேச செயலகத்தின் ஊழியர்களையும், பிரதேச செயலகத்திற்கு வந்த மக்களையும் அப்புறப்படுத்தி, சம்பவம் குறித்து பாதுகாப்புப் படையினருக்கு தகவல் அளித்துள்ளார்.

அதனைதொடர்ந்து, நாவலப்பிட்டி காவல்துறை, காவல்துறை விசேட அதிரடிப்படை, இராணுவ வெடிகுண்டு செயலிழப்பு பிரிவு மற்றும் காவல்துறை மோப்ப நாய் பிரிவு ஆகியவற்றின் உதவியுடன் சேமிப்பு அறையை ஆய்வு செய்த பின்னர், அங்கு சந்தேகத்திற்குரிய எதுவும் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |