உக்ரைனில் மீண்டும் குண்டுமழை!! இராணுவ கட்டமைப்புகள் நிலைகுலைவு
russia
ukraine
bombs
By Vanan
உக்ரைன் தலைநகர் கியேவில் இன்று காலை முதல் குண்டுத் தாக்குதல் சத்தங்கள் கேட்ட வண்ணம் உள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறித்த ஊடகங்களின் தகவல்படி, தலைநகரில் உள்ள ஒரு இராணுவ தொழிற்சாலை மீது ரஸ்யாவின் தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன.
ரஸ்ய பாதுகாப்பு அமைச்சின் தகவல்படி, எதிரிகளின் இலக்குகள், உபகரணங்கள், கிடங்குகள் மற்றும் ஆயுத சேமிப்பு தளங்கள் உட்பட்டவை துல்லியமான ஏவுகணைகள் மூலம் அழிக்கப்பட்டன.
தெற்கு உக்ரைனில் உள்ள மைகோலாய்வில் உள்ள இராணுவ உபகரணங்கள் பழுதுபார்க்கும் தளமும் தாக்கப்பட்டதாக ரஸ்ய பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
இது பற்றிய விரிவான செய்திகளுக்கும் மேலும் பல முக்கிய செய்திகளுக்கும் எமது மாலை நேர பிரதான செய்திகளுடன் இணைந்திருங்கள்.

மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி