மத்திய வங்கி முன்னாள் ஆளுனர் அர்ஜுன் மகேந்திரனுக்கு மீண்டும் அழைப்பாணை
மத்திய வங்கியின் முன்னாள் ஆளுனர் அர்ஜுன் மகேந்திரனுக்கு கொழும்பு பிரதான மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தினால் மீண்டும் அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.
மத்திய வங்கியின் பிணை முறிமோசடி தொடர்பான வழக்கு நேற்றைய தினம் (26) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது கொழும்பு பிரதான மாஜிஸ்திரேட் நீதவான் அசங்க போதரகம குறித்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
கடந்த 2015ம்ஆண்டு நடைபெற்ற மத்திய வங்கியின் பிணைமுறி விவகாரம் தொடர்பான விசாரணையின் போது இலஞ்சம் மற்றும் ஊழல் தொடர்பான சட்டத்தின் கீழ் அர்ஜுன் மகேந்திரனுக்கு எதிராக ஊழல் குற்றச்சாட்டின் கீழ் வழக்குத் தொடர முடியும் என்று இலஞ்சம் மற்றும்ஊழல், மோசடி தடுப்பு ஆணைக்குழு அதிகாரிகள் நீதிமன்றத்தில் தெரிவிததிருந்தனர்.
அதனையடுத்து அர்ஜுன் மகேந்திரனுக்கு குறித்த வழக்கில் விசாரணைக்கு ஆஜராகுமாறு மீண்டும் அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது.
வழக்கின் மேலதிக விசாரணைகள் எதிர்வரும் ஜனவரி மாதம் 16ம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
