மண்டையோடு அற்ற நிலையில் செம்மணியில் மீட்டக்கப்பட்ட என்புகூடுகள்
செம்மணி மனித புதைகுழியின் 39ஆவது நாளான இன்றைய தினம் அருகருகே இரு சிறுவர்களின் என்புக்கூடு உட்பட 13 என்பு கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சட்டத்தரணி ரனித்தா ஞானராஜா தெரிவித்துள்ளார்.
செம்மணி மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளை முன்னெடுக்க நீதிமன்றம் அனுமதி வழங்கிய நிலையில் இன்று மேற்கொள்ளப்பட்ட அகழ்வு பணிகளில் சில என்புகள் குவியலாக அடையாளம் காணப்பட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.
சில என்புகூட்டு தொகுதிகளில் மண்டையோடு குவியல்களாக காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. அத்துடன் சில என்புக்கூடுகளுக்கு மண்டையோடுகள் இல்லாத நிலையில் அடையாளம் காணப்பட்டுள்ளதாவும் தெரிவிக்கப்படுகிறது.
மண்டையோட்டு குவியல்
இந்நிலையில் அதேவேளை குவியலாக காணப்பட்ட என்பு குவியலுக்குள் மண்டையோடுகளும் காணப்படுவதனால் ஆய்வுகளின் பின்னரே அவை தொடர்பில் மேலதிகமான தகவல் கூற முடியும் என சட்டத்தரணி ஞா.ரனித்தா தெரிவித்துள்ளார்.

அதேவேளை ஏற்கனவே அடையாளம் காணப்பட்டதில் 03 சிறுவர்களின் என்புக்கூடுகள் உள்ளிட்ட 04 என்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது.
அதன் அடிப்படையில் செம்மணி புதைகுழியில் முதலாம் இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்டம் என இதுவரையில் 93 நாட்கள் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில் 467 என்பு கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் 444 என்பு கூடுகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
கொடிய சட்டமான PTA கொண்டுவரப்பட்டு இன்றுடன் 47 ஆண்டுகள்…
3 நாட்கள் முன்