யாழில் இளம் குடும்பஸ்தர் தவறான முடிவெடுத்து உயிர்மாய்ப்பு
புதிய இணைப்பு
யாழில் (Jaffna) மனைவியை பிரிந்து வாழ்ந்த இளம் குடும்பஸ்தர் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்துள்ளார்.
கீரிமலை வீதி, நல்லிணக்கபுரம் பகுதியைச் சேர்ந்த சிறிமோகன் கஜேந்திரன் (வயது 30) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், இவர் கடந்த ஒன்றரை வருடங்களாக மனைவியை பிரிந்து வாழ்ந்துள்ளார்.
மரண விசாரணை
இவர் கடந்த 22ஆம் திகதி அதிகாலை மனைவியின் தந்தையின் வீட்டுக்கு சென்று தனக்கு தானே மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துள்ளார்.
பின்னர் உறவினர்கள் அவரை மீட்டு தெல்லிப்பழை வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற நிலையில் அங்கிருந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார். இருப்பினும் சிகிச்சை பலனின்றி நேற்று காலை உயிரிழந்துள்ளார்.
அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.
உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
முதலாம் இணைப்பு
யாழில் (Jaffna) ஹோட்டலில் மின்தூக்கியில் இருந்து விழுந்து இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்து யாழ். காவல்துறை பிரிவிற்குட்பட்ட பண்ணை பகுதியில் நேற்று (21) இரவு நிகழ்ந்ததாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
அச்செழு வடக்கு நீர்வேலியைச் சேர்ந்த 19 வயதுடைய வைரவநாதன் டிலக்க்ஷன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
பாதுகாப்பற்ற மின்தூக்கி
உயிரிழந்தவர் ஹோட்டலின் ஊழியர் என்றும், பொருட்களை கொண்டு செல்வதற்காக வடிவமைக்கப்பட்ட பாதுகாப்பற்ற மின்தூக்கியில் பயணித்த போது இந்த விபத்து நிகழ்ந்ததாகவும் காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
குறித்த விபத்தில் படுகாயமடைந்த இளைஞன் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட போதும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
உயிரிழந்தவரின் சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பிணவறையில் வைக்கப்பட்டுள்ளது.
மேலும், யாழ்ப்பாணம் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
நல்லூர் கந்தசுவாமி கோவில் 10ஆம் நாள் திருவிழா
