பதுளையில் கோர விபத்து! மூவர் பலி : எடுக்கப்படவுள்ள நடவடிக்கை
புதிய இணைப்பு
பதுளை பகுதியில், விபத்துக்குள்ளான சுற்றுலா பேருந்தை மோட்டார் போக்குவரத்து திணைக்கள அதிகாரிகள் குழுவொன்று ஆய்வு செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பதுளை – மஹியங்கனை வீதியில் துன்ஹிந்த – திம்பிரிகஸ்பிட்டிய 4 ஆம் கட்டைப் பகுதியில் நேற்று (21) குறித்த பேருந்து விபத்துக்குள்ளாகியிருந்தது.
இந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்ததுடன் 31 பேர் காயமடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
முதலாம் இணைப்பு
பதுளை - துங்ஹிந்த பகுதியில் சுற்றுலா பேருந்தொன்று வீதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் மூன்று பேர் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்
குறித்த விபத்து இன்றைய தினம் (21.06.2025) சம்பவித்துள்ளது.
மேலதிக விசாரணை
உயிரிழந்தவர்களில் இரண்டு பெண்களும் உள்ளடங்குவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் விபத்தில் காயமடைந்த 26 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்துள்ளனர் .
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

