ஓடும் பேருந்திலிருந்து தவறி விழுந்து இளைஞன் பலி - தமிழர் பகுதியில் துயரம்
ஆடை நிறுவன ஊழியர்களை ஏற்றிச் சென்ற பேருந்திலிருந்து இளைஞன் ஒருவர் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார்.
குறித்த துயர சம்பவம் நேற்று இரவு கிளிநொச்சி (Kilinochchi) காவல்துறை பிரிவுக்குட்பட்ட உருத்திரபுரம் வீதியின் 8 கால்வாய் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
உருத்திரபுரத்தைச் சேர்ந்த 26 வயதான இளைஞனே இச்சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.
மேலதிக விசாரணை
சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், கிளிநொச்சி - உருத்திரபுரம் வீதியின் 8 கால்வாய் பகுதியில், அரவியார் நகரிலிருந்து உருத்திரபுரம் நோக்கிச் சென்ற பேருந்திலிருந்து நேற்று (18) இரவு பயணியொருவர் தவறி விழுந்துள்ளார்.
ஆடை நிறுவன ஊழியர்களை ஏற்றிச்சென்ற பேருந்திலிருந்தே இளைஞன் தவறி விழுந்துள்ளார். விபத்தில் காயமடைந்த நபர், கிளிநொச்சி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
சடலம் கிளிநொச்சி வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
குறித்த பேருந்து சாரதி கைது செய்யப்பட்டுள்ளதையடுத்து, சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
