காதலி பேசாததால் விபரீத முடிவெடுத்த காதலன்
காதலி பல நாட்களாக தொலைபேசியில் பேசாததால் மனமுடைந்த காதலன் தன்னைத்தானே சுட்டு உயிரை மாய்துள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
மொனராகல காவல்துறை பிரிவுக்குட்பட்ட மதுருகெட்டிய சந்திக்கு அருகில் வசிக்கும் 21 வயதுடைய ஆர்.எம். ஹஷான் இந்திக பண்டார என்ற இளைஞனே இவ்வாறு தனது உயிரை மாய்த்துக்கொண்டவராவார்.
நேற்று புதன்கிழமை (05) மாலை 5.00 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
மீட்கப்பட்ட கடிதம்
உயிரை மாய்த்துக்கொள்வதற்கு முன்பு தனது தாய் மற்றும் தந்தைக்கு எழுதிய கடிதமொன்று மீட்கப்பட்டதுடன் அவரது பணப்பையில் காதலியின் புகைப்படமும் காணப்பட்டுள்ளது.

போயா தனமான நேற்று புதன்கிழமை (05) குறித்த இளைஞனின் தாய் விகாரைக்கு சில அனுஷ்டானம் செய்வதற்காக சென்றிருந்ததுடன் பாட்டன் அருகிலுள்ள கடைக்குச் சென்று திரும்பி வந்தபோது அவர் இறந்து கிடந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |