முல்லைத்தீவில் சோகத்தை ஏற்படுத்திய சிறுவனின் மரணம்
முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு உடையார் கட்டு பிரதேத்தில் வசித்துவரும் நான்கு வயதுடைய சிறுவன் உயிரிழந்தமை அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த சிறுவன் நிமோனியா காய்ச்சலால் பாதிக்கப்பட்டநிலையில் சிகிச்சை பலனின்றி இன்று (13) உயிரிந்தான்.
உடையார் கட்டு பகுதியினை சேர்ந்த நிர்மலன் கபீஸ் என்ற சிறுவனே உயிரிழந்தவனாவான்.
முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனைக்கு

நேற்று (12) இரவு சிறுவன் சளிக் காய்ச்சலால் பீடிக்கப்பட்ட நிலையில், புதுக்குடியிருப்பு ஆதார மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டு, அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனை கொண்டு செல்லப்பட்ட நிலையில், இன்று அதிகாலை 2.00 மணியளவில் உயிரிழந்துள்ளான்.
பிரேத பரிசோதனையில் வெளியான தகவல்

உயிரிழந்த சிறுவனின் பிரேத பரிசோதனை இன்று முல்லைத்தீவு மாவட்ட சட்டவைத்திய அதிகாரியினால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்போது சிறுவன் நிமோனியா காய்ச்சல் காரணமாக உயிரிழந்துள்ளமை தெரியவந்துள்ளது.