பிரேசிலில் தொடரும் கனமழை: உயர்வடையும் பலி எண்ணிக்கை
தெற்கு பிரேசிலில் பெய்து வரும் கனமழை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 39 ஆக உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மேலும் 70 பேர் மாயமாகி உள்ளதாகவும் அவர்களை தேடும் பணியில் மீட்பு படையினர் தொடர்ந்து ஈடுபட்டு வருவதாகவும் சிவில் பாதுகாப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.
கனமழை
பிரேசிலில் உள்ள ரியோ கிராண்டே டோ சுல் மாகாணத்தில் சமீப நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள பல நகரங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன.
இதற்கிடையே வெள்ளத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வசிக்கும் சுமார் 5 ஆயிரம் பேர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.
எச்சரிக்கை
1.4 மில்லியனுக்கும் அதிகமான மக்கள்தொகை கொண்ட போர்டோ அலெக்ரே நகரத்திற்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக அர்ஜென்டினா(Argentina) மற்றும் உருகுவே(Uruguay) நாட்டின் எல்லையில் அமைந்துள்ள பல நகரங்களுக்கு அங்கு அவசர நிலை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |