பாணின் விலை குறைப்பு தொடர்பில் வெளியான தகவல்
மின்சாரக் கட்டணம் குறைக்கப்பட்ட போதிலும் பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலைகளை குறைக்க முடியாது என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் எம்.கே.ஜயவர்தன தெரிவித்துள்ளார்.
மின்சாரக் கட்டணம், எரிபொருள் கட்டணம், எரிவாயு விலைகள் அதிகரித்த போதிலும் பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலைகள் அதிகரிக்கப்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
பேக்கரி பொருட்களின் விலை
பேக்கரி பொருட்களுக்கு தேவையான பிரதான பொருட்களான மாவு, சீனி, முட்டை மற்றும் மாஜரின் ஆகியவற்றின் விலை குறைக்கப்பட்டால், பேக்கரி பொருட்களின் விலை குறைக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.
நாடளாவிய ரீதியில் சுற்றிவளைப்பு
இதேவேளை எரிபொருள், சமையல் எரிவாயு, மின்சாரம் போன்றவற்றின் விலைகள் குறைக்கப்பட்டுள்ள போதிலும் நுகர்வோருக்கு சலுகைகளை வழங்காத வர்த்தகர்களை கண்டுபிடிக்க நாடளாவிய ரீதியில் சுற்றிவளைப்புகளை மேற்கொள்ளுமாறு நுகர்வோர் அதிகார சபையின் அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |