கல்வித்துறை அதிகாரிகளுக்கு எதிராக அதிகளவு இலஞ்ச குற்றச்சாட்டு
இந்த வருடத்தில் கல்வித்துறை அதிகாரிகளுக்கு எதிராக அதிகளவான இலஞ்ச குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளதாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பள்ளிகள், கல்வி அமைச்சகம் மற்றும் பிராந்திய அலுவலகங்களில் இருந்து 212 அதிகாரிகளுக்கு எதிராக இந்த முறைப்பாடு கிடைத்துள்ளன.
அடுத்த இடத்தில் காவல்துறையினர்
கல்வித்துறைக்கு அடுத்தபடியாக இலஞ்சப் புகார்கள் அதிகளவில் காவல்துறை அதிகாரிகள் மீது சுமத்தப்பட்டுள்ளன. அந்த அதிகாரிகள் மீதான புகார்களின் எண்ணிக்கை 161 ஆகும்.
இலஞ்சம் தொடர்பான முறைப்பாடுகளில் மூன்றாவது இடத்தில் பிரதேச செயலக அதிகாரிகளுக்கு எதிராக பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த முறைப்பாடுகள் தொடர்பில் விசாரணைகள் நடத்தப்பட்டு காணி உத்தியோகத்தர்கள் மற்றும் கிராம உத்தியோகத்தர்கள் உட்பட எட்டு அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
1945 முறைப்பாடுகள்
இதேவேளை, இவ்வருடம் ஒக்டோபர் 31ஆம் திகதி வரையில் 1945 முறைப்பாடுகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டு விசாரணை ஆணைக்குழுவின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் கூற்றுப்படி, இந்தக் காலப்பகுதியில் கைது செய்யப்பட்ட அரச அதிகாரிகளின் எண்ணிக்கை இருபத்தி ஆறு.
இதேவேளை, பொருளாதார பணவீக்க நிலைமை காரணமாக இலஞ்சம் பெறுவது அதிகரித்துள்ளதாக ஆணைக்குழுவின் அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 1 நாள் முன்
