சாதிக்க துடிக்கும் 12 வயது மாணவி: விருது வழங்கி கௌரவிப்பு
பசுமை மீட்சி பயணம் என்ற நோக்குடன் தேசிய ரீதியில் 10 இலட்சம் மரங்களை நட முயற்சிக்கும் 12 வயது மின்மினி மின்ஹா என்ற மாணவிக்கு "Brilliant Child Award " என்ற விருது வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
கல்முனை அல்-பஹ்ரியா மகா வித்தியாலயத்துடன் இணைந்து கல்முனை பிர்லியன்ட் விளையாட்டுக் கழகம் நேற்று (29) நடாத்திய நிகழ்வில் அம்மாணவிக்கு இந்த விருது வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
சாதனையாளர் விருது
சம்மாந்துறை அல் -அர்சத் ம.வித் தரம் 7 ல் கல்வி கற்று வரும் 12 வயது மாணவி மின்மினி மின்ஹா.இவர் தனது 10 வயதிலிருந்து மாவட்ட மட்ட, தேசிய மட்ட, சர்வதேச மட்டங்களில் 25 க்கும் மேற்பட்ட விருதுகளையும், கௌரவ பட்டங்களையும் பெற்றுக் கொண்ட சிறுமியாவார்.
அத்துடன், 10 இலட்சம் நபர்களினை இலக்காய் கொண்டு "சுற்றுச் சூழல் தொடர்பிலான விழிப்புணர்வு உரையினை நிகழ்த்தி வரும் ஆசிய நாடுகளில் மிக வயது குறைந்த சிறுமி" என்ற சாதனையாளர் விருதுக்காக பரிந்துரை செய்யப்பட்டுள்ளார்.
சிறப்புரை
இந்த நிலையில், குறித்த விருது வழங்கல் நிகழ்வானது, மின்மினி மின்ஹாவின் சிறப்புரை மற்றும் இறுதியாக மர நடுகையுடன் நிகழ்வு பாடசாலை விளையாட்டுப் பிரிவிற்காக விளையாட்டு உபகரணங்கள் அன்பளிப்பு இதர செயற்பாட்டில் திறமைகளை வெளிக்காட்டிய மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்குதல் என சிறப்பாக நிறைவடைந்தது.
இந்நிகழ்வு, பாடசாலை அதிபர் எம்.ஏ.சலாம், மற்றும் பிரதி அதிபர் இ.றினோசா, உதவி அதிபர்களான எம்.ஆர்.எம் முஸாதிக் , எம்.எச்.ஐ.இஸ்னத், யு.எல்.ஹிதாயா ,எம்.எப்.நஸ்மியா ஆகியோரின் பங்கேற்புடன் இடம்பெற்றுள்ளது.
மேலும், கல்முனை பிர்லியன் விளையாட்டு கழக தலைவர் எம்.எஸ்.எம்.பழில் மற்றும் கழகத்தின் தவிசாளரும் ஆரம்ப பிரிவு பொறுப்பாசிரியருமான ஏ.சி.நழீம் ஆகியோருடன் சக ஆசிரியர்களும் கலந்து சிறப்பித்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |