பிரித்தானியாவின் முக்கிய ஆவணங்கள் கழிவறையில் மீட்பு!
பிரிட்டன் அரச கடற்படையின் முக்கிய ஆவணங்கள் மதுபானக் கூடத்தின் கழிவறையில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டதாக கூறப்படுகின்றது.
குறித்த ஆவணங்கள் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பிரிட்டன் கடற்படை தெரிவித்துள்ளது.
குறித்த ஆவணங்களில் கடற்படையின் அதிநவீன கப்பல்களில் ஒன்றான HMS Anson குறித்த தகவல்கள் இருந்ததாக சர்வதேச செய்தி நிறுவனமொன்று தெரிவித்துள்ளது.
ஆவண தகவல்கள்
HMS Anson எனப்படும் அணுவாயுதக் திறன்கொண்ட நீர்மூழ்கிக் கப்பல் தொடர்பில் அந்த ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
பியூரினஸ் ரெயில்வே (Furriness Railway) மதுபானக் கூடத்தில் உள்ள கழிவறையின் உள்ளே இது கிடைத்துள்ளது.
ஆவணங்கள் கண்டுபிடிக்கப்பட்ட மதுபானக் கூடத்திற்கு அருகேதான் அந்தக் கப்பல் உருவாக்கப்பட்டதாக கூறப்படுகின்றது.
ஆனால், இந்த ஆவணங்களில் இரகசிய தகவல்கள் ஏதுமில்லை என பிரிட்டன் கடற்படை மறுத்துள்ளது.
