பிரதமராக பதவியேற்றதும் நேர வீணடிப்பின்றி அதிரடியாக களமிறங்கிய லிஸ் டிரஸ்!
பிரித்தானியாவில் புதிய பிரதமர் பதிவியேற்றதுடன் புதிய அமைச்சரவையும் நியமிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்றைய தினம் லிஸ் டிரஸ் பதவியேற்றதுடன் மாலையே புதிய அமைச்சரவையும் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, லிஸ் டிரஸின் ஆதரவாளர்களை கொண்டு புதிய அமைச்சரவை உருவாக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
புதிய அமைச்சரவையின் சுகாதாரச் செயலாளராகவும் துணைப் பிரதமராகவும் தெரேஸ் காஃபி நியமிக்கப்பட்டுள்ளார். குவாசி குவார்டெங் புதிய நிதி அமைச்சராக அறிவிக்கப்பட்டுள்ளார். அதேவேளை ஜேம்ஸ் வெளியுறவு செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
பதவி விலகலையடுத்து இடம்பெற்ற நியமனம்
சுயெல்லா பிராவர்மேன், உள்துறைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இதேவேளை உள்துறை அமைச்சராக பதவி வகித்த ப்ரீத்தி படேல், லிஸ் டிரஸ் பிரதமராக தெரிவானதும் தனது பதவி விலகல் கடிதத்தை கையளித்திருந்தார்.
அதனையடுத்து உள்துறை செயலாளராக Suella Braverman நியமிக்கப்பட்டுள்ளார். பாதுகாப்பு செயலாளராக முன்னர் பதவி வகித்த பென் வாலஸ் அதே பதவியில் நீடித்துள்ளார்.
வடக்கு அயர்லாந்து செயலாளராக இருந்த பிராண்டன் லூயிஸ் நீதித்துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
புதிய அமைச்சரவை அமைச்சர்கள்
இதேவேளை, நாதிம் ஜஹாவி Duchy of Lancaster அரசுகளுக்கிடையேயான உறவுகளுக்கான அமைச்சராகவும், சமத்துவ அமைச்சராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.
ரிஷி சுனக் பதவி விலகியதை தொடர்ந்து அவர் நிதி அமைச்சராக கடமையாற்றியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.