பிரித்தானியாவின் அதிரடி தடை : கருணாவை தொடர்ந்து தானாக வந்து சிக்கிய மைத்திரி
மூன்று முன்னாள் இராணுவத் தளபதிகள் மற்றும் ஒரு முன்னாள் துணை அமைச்சர் மீது பிரித்தானியா (United Kingdom) விதித்துள்ள தடை குறித்து முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன (maithripala sirisena) தெரிவித்த கருத்துக்கள் ஊடாக தானாக அவரே வந்து சிக்கியுள்ளதாக பிரித்தானிய அரசியல் ஆய்வாளர், தி.திபாகரன் சுட்டிக்காட்டியுள்ளார்.
குறித்த விடயத்தை லங்காசியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் குறிப்பிட்டுள்ளார்.
முன்னாள் பாதுகாப்புப் படைத் தலைவர் (ஓய்வு பெற்ற) ஜெனரல் சவேந்திர சில்வா (Shavendra Silva), முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் ஆஃப் தி ஃப்ளீட் வசந்த கரன்னாகொட (Wasantha Karannagoda), முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் ஜகத் ஜெயசூர்யா (Jagath Jayasuriya) மற்றும் முன்னாள் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா அம்மான் - Karuna Amman) ஆகிய நான்கு நபர்கள் மீது தடைகளை விதிப்பதாக பிரித்தானியா அறிவித்திருந்தது.
இது அரசியல் வட்டாரத்தில் பாரிய சர்ச்சையை ஏற்படுத்தி இருந்த நிலையில் பல அரசியல் தலைமைகள் இது தொடர்பில் தங்களது நிலைப்பாடுகளை வெளியிட்டு வந்தனர்.
இந்தநிலையில், இது தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தமது கருத்தை அண்மையில் ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தார்.
அதில், தேசிய வீரர்களுக்கு சர்வதேச அளவில் செய்யப்பட்ட அநீதியால் நான் மிகவும் அதிர்ச்சியடைந்துள்ளேன் எனவும், இந்த பாதுகாப்புத் தலைவர்கள் தாய்நாட்டின் ஒருமைப்பாட்டிற்கும் பிராந்திய ஒருமைப்பாட்டிற்கும் போராடியவர்கள் அத்தோடு அவர்கள் மக்களைக் கொல்லவில்லை எனவும் சுட்டிக்காட்டியிருந்தார்.
அத்தோடு, தமிழீழ விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்ட போது பதில் பாதுகாப்பு அமைச்சராக இருந்தவன் நான் எனவே, கடைசி இரண்டு வாரங்களில் என்ன நடந்தது என்பது எனக்குத் தெரியும் அதனால், எங்கள் முப்படை அதிகாரிகளுக்கு செய்யப்பட்டது மிகவும் அநீதியானது என தெரிவித்திருந்தார்.
குறித்த பிரித்தானிய தடை தொடர்பில் பலதரப்பட்ட சர்ச்சைகள் எழுந்துள்ள நிலையில் இவ்வாறான கருத்தை அவர் வெளியிட்டிருப்பது தானாக அவர் வலையில் வந்து சிக்குவதாக அமைந்துள்ளதாக தி.திபாகரன் சுட்டிக்காட்டியுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், அந்த காலத்தில் இடம்பெற்ற போர் குற்றத்தில் மைத்திரியும் ஒரு பொறுப்பாளிதான் எனவும், அவரும் குற்றவாளி கூண்டில் நிறுத்தப்பட வேண்டிய காலம் வரும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அத்தோடு, பிரித்தானிய தடையின் பின்னணி, சிக்கப்போகும் இலங்கை அரசியல் தலைமைகள் மற்றும் யுத்த குற்றங்கள் தொடர்பில் அவர் தெரிவித்த விரிவாக கருத்துக்களுடன் வருகின்றது இன்றைய ஊடறுப்பு,
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


பிரிட்டனின் தடை… சிறிலங்காவுக்கு அடுத்த நெருக்கடியா… 5 நாட்கள் முன்
