இலங்கையின் தடுப்பூசி அட்டை தொடர்பில் பிரித்தானியா விடுத்துள்ள அறிவிப்பு!
இலங்கையில் பயன்படுத்தப்படும் தடுப்பூசி அட்டைகளுக்கு பிரித்தானியா அங்கீகாரம் வழங்கியுள்ளது எனத் தகவல் வெளியாகியுள்ளது.
பிரித்தானிய அரசாங்கத்தின் இணைய தளத்தில் இந்த விடயம் தொடர்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய இன்று முதல் இந்த புதிய நடைமுறை அமுல்ப்படுத்தப்படுகின்றது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
இலங்கையில் பயன்படுத்தப்படும் கொவிட் தடுப்பூசி அட்டைக்கு பிரித்தானியா அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இலங்கையர்கள் பிரித்தானியாவிற்கு பயணிக்கும் போது தங்களது தடுப்பூசி அட்டைகளை சான்றாக பயன்படுத்தி நாட்டுக்குள் பிரவேசிக்க முடியும் என தெரிவிக்கப்படுகின்றது.
பிரித்தானியாவிற்குள் பிரவேசிப்பதற்கு 14 நாட்களுக்கு முன்னதாக இரண்டு தடுப்பூசிகளையும் ஏற்றிக் கொண்டிருக்க வேண்டுமேன அறிவிக்கப்பட்டுள்ளது.
அஸ்ட்ரா செனகா, பைசர், மொடர்னா மற்றும் ஜென்சன் ஆகிய தடுப்பூசிகள் பிரித்தானிய அரசாங்கத்தினால் அங்கீகரிக்கப்பட்டுள்ளன.