இலங்கையிலிருந்து நாடு கடத்தப்படுவதற்கு எதிராக பிரிட்டன் பெண் எடுத்த நடவடிக்கை
பிரித்தானிய பெண் இன்ஸ்டாகிராமர் கெய்லி பிரேசர், தன்னை இலங்கையில் இருந்து நாடு கடத்தும் அதிகாரிகளின் முடிவை எதிர்த்து தாக்கல் செய்த மேன்முறையீட்டு மனு உச்ச நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
இலங்கை அரசாங்கத்திற்கு எதிரான போராட்டங்களை சமூக ஊடகங்களில் ஆவணப்படுத்தி வந்த கெய்லி பிரேசர், தனது ரிட் மனுவை நிராகரித்த மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து இந்த மேன்முறையீட்டை தாக்கல் செய்தார்.
நாடு கடத்தும் தீர்மானத்தை இரத்துச் செய்யுமாறு
தன்னிச்சையான முறையில் தன்னை நாடு கடத்தும் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் தீர்மானத்தை இரத்துச் செய்யுமாறு மேன்முறையீட்டு மனுதாரர் தனது ரிட் மனுவில் கோரியுள்ளார்.
நாட்டை விட்டு வெளியேறுமாறு அறிவிப்பு
நீதிமன்றத்தில் முறையான பிரமாணப் பத்திரம் முன்வைக்கப்படவில்லை என்றும், மேன்முறையீட்டாளர் பல உண்மைகளை மறைத்து, நீதிமன்றத்திற்கு தவறான உண்மைகளை வழங்கியுள்ளார் என்றும், சட்டமா அதிபர், மேன்முறையீட்டுக்கு எதிராக பூர்வாங்க ஆட்சேபனைகளை எழுப்பினார்.
குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம், வீசா நிபந்தனைகளை மீறியதற்காக பிரேசருக்கு வழங்கப்பட்ட வீசாவை நிறுத்த தீர்மானித்ததுடன், 2022 ம் ஆண்டு ஓகஸ்ட் 15 ஆம் திகதி நாட்டை விட்டு வெளியேறுமாறு அவருக்கு அறிவித்திருந்தது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |