இலங்கைக்கு வருகை தந்த பிரித்தானிய இளவரசி
இலங்கைக்கான இரண்டு 2 நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்ட பிரித்தானிய இளவரசி ஆன் (Anne) சற்றுமுன்னர் இலங்கைக்கு வருகை தந்துள்ளார்.
இளவரசி ஆன், அவருடைய கணவர் வைஸ் அட்மிரல் சேர் திமொதி லோரன்ஸூடன் (Timothy Laurence) இன்று புதன்கிழமை லண்டனில் இருந்து கொழும்புக்கு தனது பயணத்தை மேற்கொண்டுள்ளார்.
அவர் சிறிலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்திலே இலங்கைக்கு வருகைதந்துள்ளார்.
சிறிலங்கன் ஏர்லைன்ஸ்
இது குறித்து சிறிலங்கன் ஏர்லைன்ஸ் விமான சேவை தனது உத்தியோகப்பூர்வ சமூக வலைத்தளத்தில், இலங்கைக்கும் பிரித்தானியாவுக்கும் இடையிலான 75 வருட இராஜதந்திர உறவுகளை நினைவுகூரும் வகையில் இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயமாக லண்டனில் இருந்து கொழும்புக்கு தனது பயணத்தை மேற்கொண்டுள்ள பிரித்தானிய இளவரசி ஆன்னை (Princess Anne) வரவேற்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்.
இளவரசிக்கும் மற்றும் அவரது தூதுக்குழுவினருக்கு இலங்கையின் அரவணைப்பையும் விருந்தோம்பலையும் விரிவுபடுத்துவது உண்மையிலேயே ஒரு கௌரவமாகும். எங்கள் விமான சேவையை பயணத்திற்கு தேர்ந்தெடுத்ததற்கு நன்றி என பதிவிட்டுள்ளது.
A service fit for a royal! We are delighted to welcome onboard Her Royal Highness The Princess Royal on her journey from London to Colombo on a two-day official visit to mark the 75 years of diplomatic relations between Sri Lanka and the UK. It is truly an honour to extend Her… pic.twitter.com/ckw7EQ9xet
— SriLankan Airlines (@flysrilankan) January 10, 2024
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |