இலங்கைக்கு சுற்றுலா வந்த இங்கிலாந்து பெண்ணுக்கு ஏற்பட்ட நிலை
இலங்கைக்கு சுற்றுலா வந்த இங்கிலாந்து பெண்ணின் கமரா உபகரணங்களை திருடிச் சென்றதாக கிடைத்த முறைப்பாட்டின் பேரில் வனவிலங்கு கண்காணிப்பாளர் கைது செய்யப்பட்டதாக கதிர்காமம் காவல்துறையினர் தெரிவித்தனர்.
கடந்த மாதம் 22ஆம் திகதி இந்த இங்கிலாந்து பெண் தனது தோழியுடன் இலங்கைக்கு வந்துள்ளார். கடந்த (05) ஆம் திகதி கதிர்காமம் பிரதேசத்திற்கு விஜயம் செய்த அவர், நேற்று (06) முன்தினம் சபாரி ஜீப்பில் கதிர்காமம் புத்தல வீதிக்கு விஜயம் செய்துள்ளார்.
கமரா உபகரணங்கள் திருட்டு
முறைப்பாட்டின்படி, குறித்த பெண் மலசலகூடத்தை பயன்படுத்துவதற்காக கல்கே வனவிலங்கு கண்காணிப்பு நிலையத்திற்கு வந்திருந்த வேளையில் கமரா உபகரணங்கள் திருடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வனவிலங்கு கண்காணிப்பாளர் கைது
இது தொடர்பான முறைப்பாட்டின் அடிப்படையில் கல்கே வனவிலங்கு காவல் நிலையத்தில் பணிபுரியும் வனவிலங்கு கண்காணிப்பாளர் ஒருவரை கதிர்காமம் காவல்துறையினர் கைது செய்து திஸ்ஸமஹாராம நீதிமன்றில் முன்னிலைப்படுத்த உள்ளனர்.
