கொழும்பில் மசாஜ் மையங்கள் என்ற போர்வையில் இயங்கி வந்த சமூக பிறழ்வான விடுதிகள் சுற்றிவளைப்பு
கொழும்பு - கொட்டாவ பகுதியில் ஆயுர்வேத மசாஜ் மையங்கள் என்ற போர்வையில் இயங்கி வந்த மூன்று சமூக பிறழ்வான விடுதியில் வைத்து பதினைந்து பேரை காவல்துறையினர் கைதுசெய்துள்ளனர்.
காவல்துறையினர் நடத்திய சோதனையின்போது, சம்பந்தப்பட்ட இடங்களில் தவறான தொழிலுக்காக விற்கப்படும் பதின்மூன்று பெண்கள் மற்றும் அதற்கு உதவிய இரண்டு ஆண்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் 25 முதல் 35 வயதுக்குட்பட்டவர்கள் ஆவர். இவர்கள் தெஹிவளை, இரத்தினபுரி, கலவான, காலி, பொலன்னறுவை, கலென்பிந்துனுவெவ, கெக்கிராவ, தெனியாய மற்றும் பத்தேகம உள்ளிட்ட நாட்டின் பல்வேறு பகுதிகளில் வசிப்பவர்கள் என விசாரணைகளில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக காவல்துறையினர் கூறியுள்ளனர்.
கைது செய்யப்பட்ட பெண்கள்
கைது செய்யப்பட்ட பெண்களில் ஒருவர், அந்த மையங்களில் ஒன்றில் மேலாளராகப் பணியாற்றியது தெரியவந்துள்ளது.

மேலும், காவலில் எடுக்கப்பட்ட இரண்டு ஆண்களும் மற்ற இரண்டு மையங்களில் மேலாளர்களாகப் பணியாற்றி, இந்தக் கும்பலை நடத்தி வந்ததாக காவல்துறை கூறியுள்ளது.
இந்நிலையில் கைது செய்யப்பட்ட அனைத்து சந்தேக நபர்களும் நீதிமன்ற நடவடிக்கைக்கு உட்படுத்தப்படவுள்ளதாக கூறப்படுகிறது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |