ஆயுர்வேத மசாஜ் நிலையம் என்ற போர்வையில் விபச்சார விடுதி : 3,000 ரூபாவிற்கு விற்கப்பட்ட பெண்கள்!
கல்கிசை பகுதியில் ஆயுர்வேத மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கி வந்த விபச்சார விடுதியை காவல்துறையினர் முற்றுகையிட்டுள்ளனர்.
கல்கிசை - இரத்மலானை பகுதியில் ஆயுர்வேத மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கி வந்த விபச்சார விடுதி சுற்றிவளைக்கப்பட்டதில் முகாமையாளர் மற்றும் ஐந்து பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக கல்கிசை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 25 வயதிலிருந்து 41 வயதுக்குட்பட்டவர்கள் எனவும் வக்வெல்ல, மொரட்டுவ, மடோல்சியம், வக்வெல்ல, பாணந்துறை மற்றும் ஹம்பாந்தோட்டை பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனவும் தெரிவித்துள்ளனர்.
விபச்சார விடுதியில் பெண்கள் 3,000 ரூபாய் முதல் 5,000 ரூபாய் வரை விற்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட பெண்கள் மற்றும் முகாமையாளர் கல்கிசை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.