கிளிநொச்சியில் வானத்தை நோக்கிச் சுட்ட காவல்துறையினர் - 9 பேர் கைது
வனஜீவி மற்றும் காவல்துறை விசேட அதிரடிப்படை அதிகாரிகளின் கடமைக்கு இடையூறு விளைவித்தமை தொடர்பாக சந்தேகநபர்கள் 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கிளிநொச்சி, அக்கராயன்குளம், பகுதியில் உள்ள ஒரு பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி அழிக்கப்படுவதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில் அதிகாரிகள் இந்த சோதனையை நடத்தியதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
காவல்துறையினர் வெளியிட்ட விசேட அறிக்கையில் குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வைத்தியசாலையில் அனுமதி
அந்த அறிக்கையில், அப்பகுதியில் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி அழிக்கப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில் அதிகாரிகள் சுற்றிவளைப்பிற்கு சென்றுள்ளனர்.

அங்கு ஏற்பட்ட பதற்ற நிலைமையை கட்டுப்படுத்த விசேட அதிரடிப்படை அதிகாரிகள் வானத்தை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தியதாகவும் காவல்துறையினர் குறிப்பிட்டனர்.
மோதல் காரணமாக காயமடைந்த விசேட அதிரடிப்படை அதிகாரிகள் நால்வர் சிகிச்சைக்காக கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் ஒருவரும் நெஞ்சு வலி காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |