கிளிநொச்சியில் கோரம் - தம்பியின் கத்திகுத்தில் அண்ணன் பலி
Kilinochchi
Sri Lanka Police Investigation
Crime
Death
By Jaso
கிளிநொச்சியில் சகோதரர்கள் இருவருக்கு இடையில் ஏற்பட்ட முண்பாடு ஒரு உயிர் பிரிவதற்கு காரணமாக அமைந்துளளது.
குறித்த சம்பவம் இன்று கிளிநொச்சி, தருமபுரம் காவல்துறை பிரிவுக்குட்பட்ட கல்லாறு பகுதியில் இடம்பெற்றுள்ளது.
சகோதரர்களுக்கிடையில் ஏற்பட்ட முரண்பாடு

சகோதரர்களுக்கிடையில் தொலைபேசியால் ஏற்பட்ட முரண்பாட்டினால், அண்ணனை தம்பி கத்தியால் குத்தியுள்ளார். குறித்த சம்பவத்தில் அண்ணன் சம்பவம் இடம்பெற்ற இடத்திலேயே பலியாகியுள்ளார்.
இவ்வாறு உயிரிழந்தவர் 37 வயதுடைய தருமராசா தவசீலன் எனும் 3 பிள்ளைகளின் தந்தை என காவல்துறையினர் தெரிவித்தனர்.
மேலதிக விசாரணை

உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக கிளிநொச்சி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர் தருமபுரம் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டடன், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.