ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்திலும் பகிடிவதை : மாணவர் மீது கொடூர தாக்குதல்
சிறி ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் (University of Sri Jayewardenepura, Sri Lanka) மாணவர் மீது கொடூர தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறி ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில், தொழில்நுட்ப பீடத்தில் மூன்றாம் வருடத்தில் கல்வி கற்கும் மாணவர் ஒருவர் மீதே இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மாணவர்கள் குழுவால் தாக்குதல்
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், தாக்குதலுக்கு உள்ளான மாணவர் பகிடிவதைக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் அதே வருட மற்றும் நான்காம் வருட மாணவர்கள் குழுவால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அவர் பல்கலைக்கழக வளாகத்தில் மாணவர் புனைப்பெயர் இல்லாமல் சுதந்திரமாக நடமாடியதும் இந்தத் தாக்குதலுக்கு காரணமாக அமைந்ததாக கூறப்படுகிறது.
சுமார் 20 மாணவர்கள் அவரது விடுதிக்கு வந்து, தலைக்கவசத்தால் தலையிலும் முதுகு பகுதியிலும் மனிதாபிமானமற்ற வகையில் தாக்கியதாக அந்த மாணவர் தெரிவித்துள்ளார்.
தாக்குதலுக்கு உள்ளான மாணவர் தற்போது வெலிகம பிரதேச வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
சப்ரகமுவ பல்கலைக்கழக (Sabaragamuwa University of Sri Lanka) மாணவர் ஒருவர் பகிடிவதை காரணமாக ஏற்பட்ட மன அழுத்தம் காரணமாக உயிரிழந்த சம்பவம் நாட்டில் இன்னும் பேசுபொருளாக இருக்கும் நிலையில், இந்தத் தாக்குதல் நடைபெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
