கட்டுநாயக்கவில் இருந்து பயணித்த வான் விபத்து - பலர் காயம்
புதிய இணைப்பு
கொழும்பு (Colombo) கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து கிண்ணியா நோக்கி பயணித்த வான் ஒன்று விபத்துக்குள்ளானதில் பலர் காயமடைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த விபத்து இன்று காலை (19) ஹபரண பகுதியில் இடம்பெற்றுள்ளது.
குறித்த விபத்து சம்பவத்தில் வான் சாரதி உட்பட சிறுவர்களும் பலத்த காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
மேலதிக விசாரணை
விபத்தில் காயமடைந்துள்ளவர்கள் தம்புள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹபரனை காவல்துறையினர் முன்னெடுத்துள்ளனர்.
முதலாம் இணைப்பு
இளம்பெண் ஒருவர் கழுத்து அறுக்கப்பட்டு கொடூரமாக படுகொலை செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவம் நேற்று (18) மத்துகம - தொலஹேன பகுதியில் இடம்பெற்றுள்ளது.
இவ்வாறு படுகொலை செய்யப்பட்டவர், 33 வயதுடைய மர்வின் சமரநாயக்க மாவத்தை, அங்கலவத்தை பகுதியைச் சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது.
மேலதிக விசாரணை
உயிரிழந்த பெண்ணின் உடலில் பல வெட்டுக் காயங்கள் காணப்படுகின்றன. காதல் உறவு தொடர்பான தகராறு காரணமாக இந்தப் படுகொலை இடம்பெற்றுள்ளமை காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.
அதன்படி, சந்தேக நபர் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், அவர் அப்பகுதியிலிருந்து தப்பிச் சென்றுள்ளார்.
மரணித்தவரின் உடல், நீதவான் விசாரணையின் பின்னர் நாகொடை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
மேலும் சம்பவம் குறித்து மத்துகம காவல்துறையினர் விசாரணையை ஆரம்பித்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
