நுவரெலியாவில் அம்மன் கோவில் வளாகத்தில் புத்தர் சிலை! தடுத்து நிறுத்திய கிராம மக்கள்

By Dharu Aug 09, 2026 12:47 AM GMT
Report

வலப்பனை மல்லிகைப்பூ தோட்டத்தின் அம்மன் ஆலய வளாகத்தில் வெள்ளிக்கிழமை இரவு அடையாளம் தெரியாதோரால் புத்தர் சிலையொன்று வைப்பதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டமையால் அப்பகுதியில் பதற்ற நிலைமை ஏற்பட்டுள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமையன்று இரவு வெள்ளை நிற வானில் வந்த குழுவினர் சிலர் அப்பகுதியில் நீண்ட காலமாக இருந்து வந்த அம்மன் ஆலயத்தின் வளாகத்தில் புத்தர் சிலையை நிறுவுவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர்.

இதன் போது தகவல் அறிந்த பிரதேச இளைஞர்கள் அவ்விடத்துக்குச் சென்று சம்பவத்தை கையடக்கத் தொலைபேசி மூலம் பதிவு செய்துள்ளனர். வெள்ளை வானின் உள்ளே புத்தர் சிலையொன்றும் இருந்துள்ளது.

இலங்கையின் தென்பகுதி வரை நீடித்த இந்திய கடற்றொழிலாளர்களின் ஊடுருவல்

இலங்கையின் தென்பகுதி வரை நீடித்த இந்திய கடற்றொழிலாளர்களின் ஊடுருவல்

மிரட்டல் விடுத்த குழுவினர்

இதனிடையே முச்சக்கர வண்டிகள் மற்றும் வாகனங்களில் வந்த குழுவினர் சம்பவத்தை பதிவு செய்தவர்களுக்கு மிரட்டல் விடுத்ததுடன் என்ன வேண்டுமானால் செய்து கொள்ளுங்கள் நாம் பயமில்லை எனக் கூறியுள்ளனர்.

நுவரெலியாவில் அம்மன் கோவில் வளாகத்தில் புத்தர் சிலை! தடுத்து நிறுத்திய கிராம மக்கள் | Buddha Statue At Amman Temple In Nuwara Eliya

இதையடுத்து மேற்படி பகுதி மக்கள் இராகலை காவல்துறைக்கு தகவல் வழங்கியுள்ளனர். சம்பவ இடத்துக்கு உடனடியாகச் சென்று காவல்துறை புத்தர் சிலை நிறுவும் முயற்சியை தடுத்து நிறுத்தியதுடன் மேற்படி குழுவினரை விசாரணை செய்துள்ளதுடன் அவர்களை அங்கிருந்து செல்லும்படி கூறியுள்ளனர்.

குறித்த பகுதியில் நூறு வருடங்களுக்கும் மேல் அம்மன் மற்றும் காவல் தெய்வ வழிபாடு மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் திடீரென எங்கிருந்தோ வந்த சிலர் இவ்வாறு நடந்து கொள்வதாகவும் இது தமக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் மேற்படி தோட்ட மக்கள் தெரிவிக்கின்றனர்.

இச்சம்பவம் தொடர்பில் காவல்துறை மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

நீதியின் ஓலம்': தமிழினப்படுகொலைக்கு நீதிகோரி வடக்கில் மாபெரும் கவனயீர்ப்புப்போராட்டம்

நீதியின் ஓலம்': தமிழினப்படுகொலைக்கு நீதிகோரி வடக்கில் மாபெரும் கவனயீர்ப்புப்போராட்டம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
9ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், Oslo, Norway

24 Sep, 2022
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி வடக்கு

21 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
நன்றி நவிலல்

மானிப்பாய், Scarborough, Canada

24 Aug, 2026
நினைவஞ்சலி
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Männedorf, Switzerland, Meilen, Switzerland

24 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு

24 Aug, 2026
3ஆம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, பருத்தித்துறை, Middelfart, Denmark

25 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், மருதனார்மடம், Markham, Canada

13 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Villetaneuse, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Vitry-sur-Seine, France

21 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Neuilly, France

23 Sep, 2016
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023