காணாமல்போனதாக கூறப்பட்ட பௌத்த பிக்குணிகள் மீட்பு!
மினுவாங்கொட - பொரகொடவத்தை பகுதியிலுள்ள பிரிவெனா ஒன்றில் கல்வி கற்றுவந்த நிலையில் காணாமல்போனதாக கூறப்பட்ட மூன்று பௌத்த பிக்குணிகள் நுவரெலியா காவல்நிலையத்தில் சரணடைந்துள்ளனர்.
குறித்த பிரிவெனாவில் பணிபுரிந்த 32 வயதுடைய பெண் ஒருவரும் அவர்களுடன் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
11, 15 மற்றும் 18 வயதுடைய குறித்த பிக்குணிகள் கடந்த ஜூலை 25ஆம் திகதி இரவு முதல் காணாமல் போயிருந்ததாக தெரியவந்துள்ளது
மேலதிக விசாரணை

விசாரணையில், மடத்தில் முதல்வர் பிரச்சினையால், பெண்ணுடன் வந்ததாக கூறப்படுகிறது
அவர்கள் மேலதிக விசாரணைகளுக்காக மினுவாங்கொடை காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
குறித்த பிக்குகளுடன் இருந்த பணிப் பெண், சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.