பூஜை வழிபாடுகளில் ஈடுபட்டிருந்த பௌத்தப் பிக்கு மீது தாக்குதல்!
Sri Lanka Police
Polonnaruwa
Sri Lanka Police Investigation
Buddhism
By Shadhu Shanker
பொலன்னறுவை அரலகம்வில பிரதேசத்தில் கும்பலொன்று பூஜை வழிபாடுகளில் ஈடுபட்டிருந்த பௌத்தப் பிக்கு மற்றும் பக்தர்களை தாக்கி பணத்தினை கொள்ளையிட்டு சென்றுள்ளது.
அரலகங்வில பிம்புரத்தேவ சுதர்சன சுதர்மாராமய விகாரைக்குள் புகுந்த சுமார் 15 பேரைக் கொண்ட கும்பலே இந்த தாக்குதலை நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொடூரமான தாக்குதல்

மோட்டார் சைக்கிளல் வருகைதந்த குறித்த கும்பல் தலைக்கவசத்தை கொண்டு பிக்குமாரை கொடூரமாக தாக்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
மேலும், தாக்குதல் நடத்திய கும்பல் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் அவர்கள் பிரதேசத்தை விட்டு தப்பி சென்றுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்நிலையில், சம்பவம் தொடர்பில் அரலகம்வில காவல்துறையினர் மேலும் விசாரணைகளை
முன்னெடுத்து வருகின்றனர்.