தீவிரமடையும் போர் பதற்றம் - உக்ரைன் தலைநகர் மீது ஏவுகணை தாக்குதல்
Russo-Ukrainian War
Ukraine
Russia
By Sumithiran
உக்ரைன் தலைநகர் கீவ் மீது ரஷ்யா நடத்திய ஏவுகணை தாக்குதலில் பொது மக்கள் 2 பேர் உயிரிழந்தனர்.
நேற்று காலை, உக்ரைன் தலைநகர் கீவ் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த சம்பவத்தில் 2 பேர் உயிரிழந்ததாக கீவ் மேயர் விட்டலி கிளிட்ச்கோ செய்தியாளர்களிடம் உறுதிப்படுத்தினார்.
உயிரிழந்தோரின் உடல்கள்

உயிரிழந்தோரின் உடல்கள் கட்டட இடிபாடுகளில் கண்டுபிடிக்கப்பட்டது என்றும், அந்த தாக்குதலில் கண்ணாடிகள் சிதறி ஒருவர் காயமடைந்ததாகவும் மேயர் கிளிட்ச்கோ கூறினார்.
மேலும், இந்த குண்டுவீச்சில் பல கட்டடங்கள் தீப்பிடித்து எரிந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
போர் பதற்றம்

கடந்த ஆண்டு பெப்ரவரி மாதம் முதல் உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா போர் தொடுத்து அந்த தாக்குதல் சற்று குறைந்த இந்த நேரத்தில், நடந்த இந்த தாக்குதல் உக்ரைனில் மேலும் போர் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.