கரைதுறைப்பற்று பிரதேச சபையின் 2023 ஆம் ஆண்டுக்கான பாதீடு ஏகமனதாக நிறைவேற்றம்
Mullaitivu
Sri Lanka Budget 2023
By Vanan
முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச சபையினுடைய 2023 ஆம் ஆண்டுக்கான பாதீடு இன்று ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.
பாதீட்டு விசேட அமர்வானது இன்று காலை பிரதேச சபையினுடைய தவிசாளர் கமலநாதன் விஜிந்தன் தலைமையில் இடம்பெற்றது.
ஏகமனதான தீர்மானம்
இதன் போது சபையில் ஆறு உறுப்பினர்கள் சமூகமளிக்காத நிலையில் 17 உறுப்பினர்கள் மத்தியில் பிரதேச சபையினுடைய தவிசாளர் கமலநாதன் விஜிந்தனால் இந்தப் பாதீடு சமர்ப்பிக்கப்பட்டது.
இதன்போது அனைத்து உறுப்பினர்களினுடைய ஏகமனதான தீர்மானத்தின் அடிப்படையில் கரைதுறைப்பற்று பிரதேச சபையின் 2023 ஆம் ஆண்டுக்கான பாதீடு இன்று நிறைவேற்றப்பட்டது.

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி