வரவு செலவுத் திட்ட பிரேரணை விவாதம்! நாடாளுமன்றத்தில் பலத்த பாதுகாப்பு
புதிய இணைப்பு
2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட பிரேரணையை முன்வைக்கவுள்ளதால், நாடாளுமன்றத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.
நாடாளுமன்ற அறையும் இன்று சிறப்பு ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டதாக வட்டாரங்கள் தெரிவித்தன.
காவல்துறை சிறப்பு அதிரடிப்படையினரால் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதற்கிடையில், நாடாளுமன்ற உறுப்பினர்களின் அறைகள் மற்றும் பிற இடங்களும் நேற்று முன்தினம் ஆய்வு செய்யப்பட்டன.
முதலாம் இணைப்பு
2026 ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு அதாவது வரவு செலவுத் திட்ட உரை இடம்பெற உள்ளது.
நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சராகிய ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இன்று (07) மாலை ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பைச் சமர்ப்பிக்க உள்ளார்.
அரச விடுமுறைகள் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகள் தவிர சனிக்கிழமை உள்ளிட்ட ஏனைய அனைத்து நாட்களிலும் வரவு - செலவுத் திட்ட விவாதம் இடம்பெறும்.
இரண்டாவது வாசிப்பு மீதான விவாதம்
அத்துடன் குழுநிலை விவாதம் நடைபெறும் காலப்பகுதியில் திங்கட்கிழமைகளில் முற்பகல் 9.30 மணிக்கும் ஏனைய நாட்களில் முற்பகல் 9 மணிக்கும் நாடாளுமன்றம் கூடவுள்ளது.

அதன்படி வரவு செலவுத்திட்ட இரண்டாவது வாசிப்பு மீதான விவாதம் நவம்பர் மாதம் 8 ஆம் திகதி முதல் 6 நாட்கள் இடம்பெறவுள்ளது.
இரண்டாவது வாசிப்பின் வாக்கெடுப்பு 14 ஆம் திகதி வெள்ளிக்கிழமை பிற்பகல் 6.00 மணிக்கு நடத்தப்படவுள்ளது.
குழு நிலை விவாதம் நவம்பர் மாதம் 15 ஆம் திகதி முதல் 17 நாட்கள் நடத்தப்படவுள்ளது. மூன்றாவது வாசிப்பின் வாக்கெடுப்பு டிசம்பர் மாதம் 5 ஆம் திகதி பிற்பகல் 6 மணிக்கு நடத்தப்படவுள்ளது.
முக்கிய ஒதுக்கீடுகளாக நிதி அமைச்சு: ரூ. 634 பில்லியன் மாகாண மற்றும் உள்ளூராட்சி சபைகள்; ரூ. 618 பில்லியன் பொது நிர்வாக அமைச்சு: ரூ. 596 பில்லியன் சுகாதாரம் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சு: ரூ. 554 பில்லியன் பாதுகாப்பு அமைச்சு: ரூ. 455 பில்லியன் ஒதுக்கப்பட்ட உள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |