1,700 மில்லியன் ரூபாய்....! விவசாயிகளுக்கு வெளியான தகவல்
விவசாய அபிவிருத்திக்காக 1,700 மில்லியன் ரூபாய் ஒதுக்கிடப்படும் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் தற்போது நடைபெற்று வரும் 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்ட உரையில் கருத்து தெரிவிக்கும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.
நீரியல் வளப் பகுதிகளை உள்ளடக்கிய சுற்றுலா தொழிற்துறை அபிவிருத்திக்காக 3,500 மில்லியன் ரூபாய் ஒதுக்கிடப்படும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
மில்லியன் ரூபாய் ஒதுக்கப்படும்
அடுத்த வருடத்திற்கான பல்வேறு கடன் வசதிகளுக்காக 80,000 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

சுற்றுலா தொழில் நிபுணர்களை உருவாக்க 500 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
உள்ளக விமான சேவைகளை விரிவுப்படுத்த அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. கட்டுநாயக்க விமான நிலையத்தை விரிவுப்படுத்தும் வேலைத்திட்டத்தை அடுத்த வருடம் ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |