தன்னை ஹிட்லர் என விமர்சித்தவர்களுக்கு சபையில் பதிலடி கொடுத்த ஜனாதிபதி!
நாட்டில் இடம்பெற்று வரும் குற்றங்களை கட்டுப்படுத்துவற்கு நடவடிக்கை எடுக்கும் போது தன்னை ஹிட்லர் என சிலர் விமர்ச்சிப்பதாக ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க கூறியுள்ளார்.
மக்களுக்கு எதிராக யாரேனும் தவறு இழைத்திருந்தால், அவர்கள் யாராக இருந்தாலும் சட்டத்தின் கீழ் தண்டனை வழங்கப்படும் எனவும் யாருக்கும் பாரபட்சம் பார்க்கப்படாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் தற்போது நடைபெற்று வரும் 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்ட உரையில் கருத்து தெரிவிக்கும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.
வரலாற்று பதிவு
மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி, “என்னை ஹிட்லர் என்கிறார்கள். பாவம். ஹிட்லரை தோற்கடிக்க அமெரிக்காவும், ரஷ்யாவும் ஒன்றிணைந்தது போல ஹிட்லரை தோற்கடிக்க ரஷ்யாவும், அமேரிக்காவும் இணைந்தது ஒரு வரலாற்று பதிவு, அதனுடன் ஒப்பிடாதீர்கள்.

குற்றமிழைத்தவர்களுக்கு நிச்சயம் தண்டனை வழங்கப்படும். அதற்கு நீங்கள் என்ன பெயர் வைத்தாலும், என்ன விளக்கம் வழங்கினாலும் சட்டத்தை செயற்படுத்துவோம்.
எந்தப் பதவியில் இருந்தாலும் தவறிழைத்தவர்களுக்கு தண்டனை வழங்கப்படும்” என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |