போக்குவரத்து அமைச்சின் செலவினத் தலைப்புக்களின் கீழ் குழுநிலை விவாதம்
2025ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு மீதான விவாதம் இன்றும் (07) இடம்பெறுகின்றது.
போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சு (Ministry of Transport, Highways, Ports and Civil Aviation), நகர அபிவிருத்தி, நிர்மாணிப்பு மற்றும் வீடமைப்பு அமைச்சு (Ministry of Urban Development, Construction and Housing) ஆகியவற்றின் செலவினத் தலைப்புக்களில் இன்று குழு நிலை விவாதம் இடம்பெறவுள்ளது.
அதன்படி காலை 9.30க்கு சபாநாயகர் தலைமையில் ஆரம்பமான இன்றைய நாடாளுமன்ற அமர்வுகள் மாலை 6.30 வரை நடைபெறவுள்ளது.
காலை 09.30 முதல் 10.00 வரை வாய்மூல விடைக்கான வினாக்களுக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
காலை 10.00 முதல் 06.00 வரை 2025 ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலம் மீதான குழு நிலை விவாதம் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சின் தலைப்புக்கள் 117, 306, 307 மற்றும் 336 ஆகிய தலைப்புகளின் கீழ் நடைபெறவுள்ளது.
அத்துடன் நகர அபிவிருத்தி, நிர்மாணிப்பு மற்றும் வீடமைப்பு அமைச்சின் 123, 309 முதல் 311 வரையும் மற்றும் 332 ஆகிய தலைப்புகளின் கீழும் குழுநிலை விவாதம் நடைபெறவுள்ளது.
மாலை 6.00 முதல் 6.30 வரை ஒத்திவைப்பு வேளையின் போதான ஆளுங்கட்சியின் பிரேரணைக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் கடந்த 27ஆம் திகதி ஆரம்பமான குழுநிலை விவாதம் எதிர்வரும் 21 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |



உலகில் பெண் விடுதலையை சாத்தியப்படுத்திய தலைவர் பிரபாகரன்… 15 மணி நேரம் முன்

நெருக்கடி நிலைமைகளும் மலையகத் தமிழர்களும்
4 நாட்கள் முன்