ஜனாதிபதிக்கும் கல்வி அமைச்சின் அதிகாரிகளுக்கும் இடையில் சந்திப்பு
2025 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளில் கல்விக்காக ஒதுக்கப்பட்ட நிதி ஒதுக்கீடுகள் மற்றும் அந்த நடவடிக்கைகளின் முன்னேற்றம் குறித்தும் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கும் (Anura Kumara Dissanayake) கல்வி அமைச்சின் (Ministry of Education) அதிகாரிகளுக்கும் இடையிலான கலந்துரையாடல் நேற்று (06.03.2025) ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.
கல்வித் துறையில் எழுந்துள்ள பிரச்சினை
இதன்போது, கல்வித் துறையில் எழுந்துள்ள பிரச்சினைகள் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டதுடன், இது தொடர்பாக செயல்படுத்த வேண்டிய புதிய சீர்திருத்தங்கள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.
பாடசாலைக் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி ஆகிய துறைகளை மேம்படுத்துவதற்காக எடுக்கப்பட வேண்டிய எதிர்கால நடவடிக்கைகள் குறித்தும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.
பிரதமரும் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சருமான ஹரிணி அமரசூரிய (Harini Amarasuriya), கல்வி, உயர்கல்வி பிரதி அமைச்சர் மதுர செனவிரத்ன, தொழிற்கல்வி பிரதி அமைச்சர் நளின் ஹேவகே, ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் செயலாளர் நாலக கலுவெவ, பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர, ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் கபில ஜனக பண்டார மற்றும் கல்வித் துறையைச் சேர்ந்த அதிகாரிகள் பலரும் இக்கலந்துரையாடலில் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |








நெருக்கடி நிலைமைகளும் மலையகத் தமிழர்களும்
5 நாட்கள் முன்