நிதி அமைச்சின் செலவினத் தலைப்புக்களின் கீழ் இன்றைய குழுநிலை விவாதம்
2025ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு மீதான விவாதம் தொடர்ச்சியாக இன்றும் (20) இடம்பெறுகின்றது.
நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் (Ministry of Finance, Planning and Economic Development) செலவினத் தலைப்புக்களின் கீழ் இன்று குழு நிலை விவாதம் இடம்பெறவுள்ளது.
அதன்படி காலை 9.30க்கு சபாநாயகர் தலைமையில் ஆரம்பமான இன்றைய நாடாளுமன்ற அமர்வுகள் மாலை 8.00 வரை நடைபெறவுள்ளது.
காலை 09.30 முதல் 10.00 வரை வாய்மூல விடைக்கான வினாக்களுக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
காலை 10.00 முதல் 06.00 வரை 2025 ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலம் மீதான குழு நிலை விவாதம் நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் 102, 237 முதல் 252, 280, 296, 323, 324, 329, 333 மற்றும் 338 ஆகிய தலைப்புக்களின் கீழ் நடைபெறவுள்ளது.
அதனைத் தொடர்ந்து மாலை 6.00 முதல் 8.00 உண்ணாட்டரசிறை (திருத்தச்) சட்டமூலத்தின் இரண்டாம் மதிப்பீடு நடைபெறும்.
இந்த நிலையில் கடந்த 27ஆம் திகதி ஆரம்பமான குழுநிலை விவாதம் எதிர்வரும் 21ஆம் திகதி வரை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |



நெருக்கடி நிலைமைகளும் மலையகத் தமிழர்களும்
2 வாரங்கள் முன்