வெள்ளவத்தையில் உயர்மாடி கட்டிடத்தில் இருந்து விழுந்த இளைஞன் உயிரிழப்பு
Sri Lanka Police
Death
By pavan
வெள்ளவத்தை காலி வீதியில் உள்ள உயர்மாடி கட்டிடத்திலிருந்து தவறி விழுந்ததில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் நேற்று மாலை (13) இடப்பெற்றதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
குறித்த நபர் கட்டிடத்தின் 08 வது மாடியில் நிர்மாணப் பணியில் ஈடுபட்டிருந்த போதே தவறி விழுந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலதிக விசாரணை

உயிரிழந்தவர் கரந்தகொல்ல பிரதேசத்தை சேர்ந்த 34 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் வெள்ளவத்தை காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
5ம் ஆண்டு நினைவஞ்சலி