சீமானுக்கு ஆதரவாக யாழில் மாட்டு வண்டி ஊர்வலம்
Jaffna
Seeman
By Kajinthan
தமிழக தேர்தல் களம் சூடு பிடித்து நாளையதினம் வாக்களிப்பு இடம்பெறவுள்ள நிலையில் யாழ்ப்பாணத்தில் பல இடங்களில் நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமானுக்கு ஆதரவாக பதாகைகள் காட்சிப் படுத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில் இன்றையதினம்(22) மானிப்பாயில் மாட்டு வண்டி ஊர்வலம் ஒன்றும் இடம்பெற்றது. மானிப்பாய் பிரதேச சபையின் உறுப்பினர்கள் இணைந்து இதனை முன்னெடுத்தனர்.
சீமானுக்கு ஆதரவு தெரிவிக்கும் பதாகை
இதன்போது நாம் தமிழர் கட்சி சின்னம் மற்றும் செந்தமிழன் சீமானின் உருவப்படம் அடங்கிய ஆடையை அணிந்து, சீமானுக்கு ஆதரவு தெரிவிக்கும் பதாகையை மாட்டு வண்டிலில் கட்டி, ஏரினை சுமந்தவாறு மாட்டுவண்டி ஊர்வலம் இடம்பெற்றது.

மானிப்பாய் பிரதேச சபைக்கு முன்பாக ஆரம்பித்த இந்த ஊர்வலமானது மருதடி விநாயகர் ஆலயம்வரை சென்றது.

| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
2ம் ஆண்டு நினைவஞ்சலி