ரணிலின் முதல் விஜயத்தில் புதிய சிக்கல்
அதிபர் ரணில் விக்ரமசிங்கவின் ஜப்பான் விஜயத்தில் புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது.
ரணில் விக்ரமசிங்க இம்மாத இறுதியில் ஜப்பானுக்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொள்ளார் என்றும், இதன் போது ஜப்பானிய பிரதமரான புமியோ கிஷிடாவிடம் இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு ஜப்பானிடம் இருந்து உதவிகளைப் பெறுவது, ஜப்பானிய முதலீட்டுத் திட்டங்கள் உள்ளிட்ட முக்கிய விடயங்கள் குறித்து பேச்சுவார்த்தைகள் இடம்பெறவுள்ளதாவும் செய்திகள் வெளியாகியிருந்தன.
ஜப்பான் பிரதமருக்கு கொரோனா
இந்த நிலையில், ஜப்பானின் பிரதமர் புமியோ கிஷிடாவிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனை பிரதமர் அலுவலகமும் உறுதி செய்துள்ளது.
நேற்றையதினம் இருமல் மற்றும் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
அதில் அவருக்கு கொரோனா அறிகுறிகளுடன் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.
இதனைத் தொடர்ந்து புமியோ கிஷிடா தனிமைடுத்தப்பட்டு தற்போது பிரதமரின் அதிகாரபூர்வ இல்லத்தில் ஓய்வெடுத்து வருகிறார்.
ரணிலின் ஜப்பான் விஜயம்
இதனால் அதிபர் ரணில் விக்ரமசிங்கவின் ஜப்பானுக்கான விஜயம் தாமதமாலாம் எனவும், அவ்வாறு சென்றாலும் ஜப்பானின் பிரதமருடனான பேச்சுவார்த்தை தெரிவிக்கப்படுகிறது.
ரணில் விக்ரமசிங்க அதிபராக பதவியேற்றதன் பின் முதலாவதாக ஏற்பாடு செய்யப்பட்ட இந்த விஜயத்தில் புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தொடர்புடைய செய்தி
ஜப்பான் செல்லவுள்ள ரணில்! நண்பனின் இறுதிக்கிரியையில் பங்கேற்பு
